இத்தாலிய தூதரகத்தின் விசேட வேண்டுகோளுக்கிணங்க, அந்நாட்டுப் பிரஜைகளை மீண்டும் தாயகத்திற்கு அழைத்துச் செல்வதற்காக (Repatriation) கொழும்பிலிருந்து ரோம் நகருக்கு விசேட சார்ட்டர் (Charter) விமானம் ஒன்றை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இன்று இயக்கியுள்ளது.
ஐரோப்பாவை தளமாகக் கொண்ட தூதரகம் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், கொழும்பில் தங்கியிருந்த அவர்களது பிரஜைகளை ரோம் நகருக்கு அழைத்துச் செல்வதற்காகவே இந்த விசேட விமானம் ஏற்பாடு செய்யப்பட்டதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த விமானப் பயணம் வேறு சில காரணங்களுக்காக இயக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகளை விமான நிறுவனம் வன்மையாக மறுத்துள்ளது. இது முழுக்க முழுக்க வெளிநாட்டுப் பிரஜைகளைத் திருப்பி அனுப்பும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு விசேட சார்ட்டர் விமானப் பயணம் மட்டுமே என்பதை நிறுவனம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.