BREAKING NEWS

23,000 குடும்பங்களின் வயிற்றில் அடித்த அரசாங்கம்: மின்சார சபை விவகாரத்தில் சஜித் ஆவேசம்.

DH
dhusanthi dhusi in அரசியல்
Report
23,000 குடும்பங்களின் வயிற்றில் அடித்த அரசாங்கம்: மின்சார சபை விவகாரத்தில் சஜித் ஆவேசம்.

இலங்கை மின்சார சபையின் (CEB) மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மிகுந்த எச்சரிக்கையுடனும் பொறுப்புடனும் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் முறையற்ற மற்றும் கவனக்குறைவான திட்டமிடல் காரணமாக, இன்று 23,000 ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டு, அவர்கள் நடுத்தெருவில் விடப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இத்தகைய அவசரமான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் ஊழியர்களின் வாழ்வாதாரத்தைப் பாரிய அளவில் பாதித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.