BREAKING NEWS

2016-க்குப் பின் இணைந்த அரசுப் பணியாளர்களுக்கு இனி ஓய்வூதியம் உண்டு!

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
2016-க்குப் பின் இணைந்த அரசுப் பணியாளர்களுக்கு இனி ஓய்வூதியம் உண்டு!

2016ஆம் ஆண்டின் பின்னர் அரச சேவையில் இணைந்துகொண்ட அனைத்து அதிகாரிகளுக்கும் ஓய்வூதிய உரிமையை (Pension Rights) உறுதிப்படுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ அறிவித்துள்ளார்.

புதிய பல் தொழில்நுட்பவியலாளர்கள் (Dental Technicians) உள்ளிட்ட இடை மருத்துவ சேவை அதிகாரிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் நடைபெற்ற இந்நிகழ்வில், இரண்டு வருட கால பயிற்சியைப் பூர்த்தி செய்த அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வ நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

“அரச சேவையில் அத்தியாவசிய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது, உரிய தகைமைகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே அவை மேற்கொள்ளப்படும். அதேவேளை, 2016 முதல் பணியில் உள்ளவர்களின் ஓய்வூதியக் கோரிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது,” என அமைச்சர் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் கலாநிதி ஹன்சக்க விஜேமுனி உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.