BREAKING NEWS

ஷி ஜின்பிங்கின் அதிரடி: சிறுபான்மையினரை ஹான் கலாசாரத்திற்குள் கரைக்கப் புதிய திட்டம்.

DH
dhusanthi dhusi in உலகம்
Report
ஷி ஜின்பிங்கின் அதிரடி: சிறுபான்மையினரை ஹான் கலாசாரத்திற்குள் கரைக்கப் புதிய திட்டம்.

சீனாவில் உள்ள 55 சிறுபான்மை இனக்குழுக்களின் தனித்துவமான கலாசாரம், மொழி மற்றும் மத அடையாளங்களை முழுமையாக அழித்து, அவர்களைப் பெரும்பான்மை ஹான் (Han) கலாச்சாரத்திற்குள் கரைப்பதற்கான புதிய சட்டமொன்றைச் சீன நாடாளுமன்றம் இந்த வாரம் நிறைவேற்றவுள்ளது.

இந்தச் சட்டம் “பிரிவினைவாதத்தைத் தடுத்தல்” மற்றும் “தேச ஒற்றுமை” என்ற போர்வையில் கொண்டு வரப்பட்டாலும், இதன் மூலம் சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாண்டரின் (Mandarin) மொழியே பிரதானமாக்கப்படுவதால், உய்குர், திபெத்திய மற்றும் மங்கோலிய மொழிகள் மெல்ல மெல்ல வழக்கொழிந்து போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஹான் இனத்தவருக்கும் சிறுபான்மையினருக்கும் இடையிலான திருமணங்களைத் தடுப்பவர்களுக்குத் தண்டனை வழங்குவதன் மூலம், இனக்கலப்பு ஊடாகச் சிறுபான்மை அடையாளங்களைச் சிதைக்கச் சீனா திட்டமிட்டுள்ளது.

சிறுவர்கள் சிறுவயதிலேயே சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை நேசிக்க வேண்டும் எனப் பெற்றோர்களுக்குச் சட்டரீதியாகக் கட்டளையிடப்பட்டுள்ளது.

குறிப்பாக சின்ஜியாங் (Xinjiang) மாகாணத்தில் உள்ள உய்குர் முஸ்லிம்கள் மற்றும் திபெத்திய பௌத்தர்களின் மத சுதந்திரம் ஏற்கனவே நசுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சட்டம் அத்தகைய ஒடுக்குமுறைகளை மேலும் சட்டப்பூர்வமாக்கும் என அஞ்சப்படுகிறது. ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் “சீனமயமாக்கல்” (Sinicization) கொள்கையின் ஒரு முக்கிய அங்கமாகவே இந்தச் சட்டம் பார்க்கப்படுகிறது.