BREAKING NEWS

அமைச்சருக்கு எதிராக காய் நகர்த்தும் எதிர்க்கட்சி: எஸ்.எம். மரிக்கார் தகவல்.

DH
dhusanthi dhusi in அரசியல்
Report
அமைச்சருக்கு எதிராக காய் நகர்த்தும் எதிர்க்கட்சி: எஸ்.எம். மரிக்கார் தகவல்.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைக்க எதிர்க்கட்சி அதிரடியாகத் தயாராகி வருகிறது. இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் இன்று (மார்ச் 10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தியுள்ளார்.

மின்சார விநியோக முடக்கம் மற்றும் எரிசக்தித்துறையில் நிலவும் நிர்வாகச் சிக்கல்களை மையமாகக் கொண்டே, அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து எஸ்.எம். மரிக்கார் மேலும் குறிப்பிடுகையில்:

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று, தேவையான கையொப்பங்களைச் சேகரிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கையொப்பங்கள் முழுமையாகச் சேகரிக்கப்பட்டவுடன், எதிர்வரும் வாரம் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்படும்.

ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான அரசியல் மோதல் வலுத்து வரும் நிலையில், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.