BREAKING NEWS

அஸ்வெசும பயனாளிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்: மார்ச் மாதக் கொடுப்பனவு இன்று வங்கி கணக்குகளில்!’

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
அஸ்வெசும பயனாளிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்: மார்ச் மாதக் கொடுப்பனவு இன்று வங்கி கணக்குகளில்!’

அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் மார்ச் மாதத்திற்கான கொடுப்பனவுகள் இன்றைய தினம் (12) பயனாளிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

இத்திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் தகுதி பெற்றுள்ள 1,408,635 குடும்பங்களுக்காக, 11.17 பில்லியன் ரூபாவிற்கும் அதிகத் தொகை இன்று அவர்களது வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது.

அதேபோல், திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளுக்காக 2.35 பில்லியன் ரூபாவிற்கும் அதிகத் தொகை இன்றைய தினம் வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது. இதன் மூலம் நாடு தழுவிய ரீதியில் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பெரும் நிவாரணம் கிடைத்துள்ளது.

பயனாளிகள் இன்று முதல் தங்களின் அருகிலுள்ள வங்கிக் கிளைகள் அல்லது தன்னியக்க இயந்திரங்கள் (ATM) மூலம் இந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.