BREAKING NEWS

‘டிட்வா’ புயல் பாதிப்பு: கோப்பாயில் இழப்பீட்டு காசோலைகள் வழங்கி வைப்பு!”

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
‘டிட்வா’ புயல் பாதிப்பு: கோப்பாயில் இழப்பீட்டு காசோலைகள் வழங்கி வைப்பு!”

‘டிட்வா” புயல் காரணமாகப் பாதிக்கப்பட்ட சுயதொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில், அவர்களுக்கான இழப்பீட்டு காசோலைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (12) கோப்பாய் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இயற்கை அனர்த்தத்தினால் தொழில்துறையில் நஷ்டங்களைச் சந்தித்த முயற்சியாளர்களுக்கு அரசாங்கம் முன்னெடுத்து வரும் விசேட உதவித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த இழப்பீடுகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது வாழ்வாதாரத் தொழில்களை மீண்டும் கட்டியெழுப்பவும், பொருளாதார ரீதியாக முன்னேறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கோப்பாய் பிரதேச செயலாளர் அவர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்நிழ்வில், பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு இழப்பீட்டு காசோலைகள் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன. புயலினால் ஏற்பட்ட சேதங்களை ஈடுசெய்து, உள்ளூர் உற்பத்தியாளர்கள் மற்றும் சிறுதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.