இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெற்ற ‘NXT 2026’ சர்வதேச உச்சிமாநாட்டில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார், இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு வலுசேர்க்கும் வகையில் இந்திய முதலீட்டாளர்களுக்கு விசேட அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த உச்சிமாநாட்டின் நிறுவனரும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்திகேய சர்மா (Kartikeya Sharma) அவர்களைச் சந்தித்த மரிக்கார், இலங்கையில் தற்பொழுது நிலவும் சாதகமான முதலீட்டுச் சூழல் குறித்து விரிவாக விளக்கமளித்தார்.
குறிப்பாக, கார்த்திகேய சர்மாவின் அறக்கட்டளைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இலங்கைக்கு வருகை தந்து, பல்வேறு துறைகளில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் உத்தியோகபூர்வமாக வேண்டுகோள் விடுத்தார்.

முன்னதாக, உச்சிமாநாட்டின் ஒரு அங்கமாக நடைபெற்ற ‘கலாச்சார மற்றும் பிராந்திய விவகாரங்கள்’ (Cross Cultural and Regional Affairs) குறித்த குழு விவாதத்திலும் நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் பங்கேற்று, பிராந்திய ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்துத் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்கப்படும் இந்த முயற்சிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன.