அமெரிக்க பாப் பாடகி ரிஹானா வசிக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றது தொடர்பாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பொலிஸார் தெரிவித்ததன்படி, ரிஹானாவின் வீட்டை நோக்கி பலமுறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவம் இடம்பெற்ற போது ரிஹானா வீட்டில் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 30 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.