BREAKING NEWS

மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் பதவியேற்பு!

DH
dhusanthi dhusi in அரசியல்
Report
மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் பதவியேற்பு!

இலங்கையின் மேல் நீதிமன்ற புதிய நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் (S. Satheeswaran) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இன்று (13) நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற இந்நிகழ்ச்சியின் போது, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது கரங்களால் புதிய மேல் நீதிமன்ற நீதிபதிக்கான நியமனக் கடிதத்தை எஸ். சதீஸ்தரன் அவர்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.

நீதித்துறை சேவையில் நீண்டகால அனுபவம் கொண்ட விசேட தர அதிகாரியான (Special Grade Officer) எஸ். சதீஸ்தரன், முன்னதாக சாவகச்சேரி மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றி மக்கள் மத்தியில் நற்பெயர் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது அனுபவமும், நீதித்துறையிலான நேர்த்தியான சேவையும் கருத்திற்கொள்ளப்பட்டு தற்போது மேல் நீதிமன்ற நீதிபதியாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளார்.