BREAKING NEWS

கல்லாப்பெட்டி கூட்டணியே பிரதானமா? – தமிழக அரசைச் சாடும் விஜய்!

DH
dhusanthi dhusi in Tamilnadu
Report
கல்லாப்பெட்டி கூட்டணியே பிரதானமா? – தமிழக அரசைச் சாடும் விஜய்!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், பொதுமக்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழக அரசு மீது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்களைச் சுட்டிக்காட்டி விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய ஆட்சி மக்கள் நலனை விடத் தனது அரசியல் கூட்டணியைத் தக்க வைப்பதிலேயே குறியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

“தமிழகத்தில் இன்று யாருக்கும் பாதுகாப்பில்லை என்ற அச்ச உணர்வு மக்களிடையே எழுந்துள்ளது. ஒரு மாநிலத்தின் அடிப்படைத் தேவையான சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கத் தவறிய இந்த ஆட்சி தேவையா?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தி.மு.க அரசை மறைமுகமாகச் சாடிய அவர், “மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதை விட, ‘கல்லாப்பெட்டி’ கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே இந்த அரசு முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது” எனத் மிகக் காரசாரமாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுத் தனது அரசியல் நகர்வுகளைத் தீவிரப்படுத்தியுள்ள விஜய், ஆளுங்கட்சியை இவ்வளவு கடுமையாக விமர்சித்துள்ளது தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.