BREAKING NEWS

“போர் பதற்றத்துக்கு பின்னர் நடிகர் அஜித்குமார் பாதுகாப்பாக சென்னை வந்தார்”

PR
priya priya punidha in Latest Updates
Report
“போர் பதற்றத்துக்கு பின்னர் நடிகர் அஜித்குமார் பாதுகாப்பாக சென்னை வந்தார்”

போர் பதற்றத்தால் துபாயில் சிக்கியிருந்த தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார் பாதுகாப்பாக சென்னை திரும்பினார். 

மத்திய கிழக்கு நாடுகளில் திடீரென ஏற்பட்டுள்ள போர் பதற்றம் மற்றும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், துபாயில் இருக்கும் நடிகர் அஜித்குமாரின் பாதுகாப்பு குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு செய்திகள் வெளியாகின. 

துபாயில் தங்கியிருந்த அஜித்குமார் முற்றிலும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவருக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்றும் அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா உறுதிப்படுத்தியிருந்தார். போர் சூழலைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பான இடத்தில் தங்கியிருந்தார். 

கார் ரேஸில் பங்கேற்பதற்காக துபாய் சென்றிருந்த அஜித், ஏற்கனவே திட்டமிட்டபடி மார்ச் 1 ஆம் திகதி துபாயில் இருந்து சென்னை திரும்புவதாக இருந்தது. 

இருப்பினும், ஈரானியத் தலைவர் மீதான தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்து துபாய் உள்ளிட்ட அண்டை நாடுகளின் வான்பரப்பில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல் காரணமாக, அவரது விமானப் பயணம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் தான் கடந்த சில நாட்களாக துபாயில் தங்கியிருந்த அஜித், சென்னை திரும்பியிருக்கிறார்.