BREAKING NEWS

மன்னாரில் 360 பவுன் நகை வேட்டை! போதைப்பொருள் பணத்தை பதுக்கிய பெண் கைது.

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
மன்னாரில் 360 பவுன் நகை வேட்டை! போதைப்பொருள் பணத்தை பதுக்கிய பெண் கைது.

தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தி சம்பாதித்த பணத்தில் வாங்கப்பட்ட சொத்துக்களை மறைக்க உதவிய குற்றச்சாட்டில், 66 வயதுடைய பெண் ஒருவர் மன்னாரில் வைத்து அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

2019 முதல் 2023 வரை தென்னிந்தியாவிலிருந்து மன்னார் ஊடாக பாரியளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பிரதான சந்தேகநபர், அந்தப் பணத்தைக் கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். இரண்டு மாடி வீடு, ஐந்து அறைகளைக் கொண்ட மற்றொரு வீடு, கார் மற்றும் சுமார் 360 பவுன் தங்க நகைகளை அவர் சட்டவிரோதமாகச் சேர்த்துள்ளது விசாரணையில் அம்பலமானது.

பிரதான சந்தேகநபர் கைதானதைத் தொடர்ந்து, அவரது மாமியார் இந்த 360 பவுன் தங்க நகைகளை மன்னார் பகுதியிலுள்ள பல்வேறு நிதி நிறுவனங்களில் அடகு வைத்துள்ளார். பின்னர் அவற்றைப் பல நகைக்கடைகளிலும் விற்பனை செய்து பணமாக்கியுள்ளார். கடத்தல் மூலம் வந்த சொத்துக்கள் எனத் தெரிந்தே, பணமோசடிக்கு உதவிய குற்றச்சாட்டில் குறித்த 66 வயதுப் பெண் இப்போது சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளார்.

சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரின் கோரிக்கையை ஏற்ற மன்னார் மேல் நீதிமன்றம், கடத்தல்காரரின் வீடுகள் மற்றும் காரை முடக்கி உத்தரவிட்டுள்ளது. கடத்தல் பணத்தில் சொத்து சேர்த்த மற்றவர்கள் குறித்தும் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.