BREAKING NEWS

அமெரிக்க டொலருக்கு எதிராகச் சரிந்தது இலங்கை ரூபாய்!

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
அமெரிக்க டொலருக்கு எதிராகச் சரிந்தது இலங்கை ரூபாய்!

கடந்த வார இறுதியில் ஓரளவு வலுவாகக் காணப்பட்ட இலங்கை ரூபாயின் பெறுமதி, இன்றைய தினம் (16) அமெரிக்க டொலருக்கு எதிராகச் சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி, இலங்கையின் முன்னணி வர்த்தக வங்கிகளில் டொலரின் விற்பனை விலை 314 ரூபாயைக் கடந்து பதிவாகியுள்ளது.

இன்றைய வர்த்தக ஆரம்பத்தில் சம்பத் வங்கி மற்றும் என்.டி.பி வங்கிகளில் டொலரின் விற்பனை விலை முறையே 314.75 மற்றும் 314.65 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதேபோல், மக்கள் வங்கி மற்றும் கொமர்ஷல் வங்கி ஆகியவற்றிலும் டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்களுக்கு மத்தியில், இலங்கையின் பிரதான வங்கிகள் அனைத்திலும் டொலரின் பெறுமதி கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் சுமார் 20 முதல் 50 சதம் வரை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.