கொழும்பு – பிலியந்தலை வீதியின் ரத்தனபிட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறிய லொறி ஒன்றும் பாடசாலை வேன் ஒன்றும் விபத்துக்குள்ளானதுடன், பின்னர் அவை வீதியோரத்திலிருந்த மின் கம்பம் ஒன்றிலும் மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக 120 வீதியில் பிலியந்தலையிலிருந்து கொழும்பு நோக்கிய தடத்தில் வாகனப் போக்குவரத்திற்குத் தடை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.