BREAKING NEWS

மொரட்டுவையில் முச்சக்கர வண்டியில் கொலை செய்யப்பட்டவர் மீட்பு: போலீசார் விசாரணை

PR
priya priya punidha in Latest Updates
Report
மொரட்டுவையில் முச்சக்கர வண்டியில் கொலை செய்யப்பட்டவர் மீட்பு: போலீசார் விசாரணை

வெட்டுக்காயங்கள் மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் சடலம், மொரட்டுவை காலி வீதிப் பகுதியில் உள்ள முச்சக்கர வண்டி ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. 

காலி வீதியில், கருச சந்தியிலிருந்து மொரட்டுவை நோக்கி அமைந்துள்ள வீரபுரன் அப்பு வித்தியாலயத்திற்கு முன்னால் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த இந்த முச்சக்கர வண்டியின் பின் ஆசனத்திற்கு அடியில் இருந்தே சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் மொரட்டுமுல்லை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். 

இவருக்கு எதிராக பல வழக்குகள் நிலுவையில் உள்ளதோடு, ஒரு வழக்கு தொடர்பாக சிறையில் இருந்து விடுதலையாகி 21 நாட்களுக்கு பின்னரே இவர் வீடு திரும்பியுள்ளார். 

சடலம் இருந்த இடத்தை கல்கிஸ்ஸை குற்றத்தடுப்பு ஆய்வு கூட திணைக்கள அதிகாரிகள் சோதனையிட்டதுடன், மொரட்டுவை பிரதான நீதவான் சம்பத் கமகே வருகை தந்து ஸ்தல ஆய்வை மேற்கொண்டார். 

சடலம் பாணந்துறை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டு மரண பரிசோதனை நடத்தப்படவுள்ளது. 

மொரட்டுவை மற்றும் மொரட்டுமுல்லை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.