BREAKING NEWS

பயணிகளுடன் இந்தோனேசிய விமானம் விபத்து- மலைப்பகுதியில் பாகங்கள் கண்டெடுப்பு

PR
priya priya punidha in Latest Updates
Report
பயணிகளுடன் இந்தோனேசிய விமானம் விபத்து- மலைப்பகுதியில் பாகங்கள் கண்டெடுப்பு

பயணிகள் 11 பேருடன் புறப்பட்ட இந்தோனேசிய விமானம் விபத்தை சந்தித்துள்ளது.

இந்தோனேசிய கடல்சார் விவகாரங்கள் மற்றும் மீன்வள அமைச்சால் இயக்கப்படும் ATR 42-500 என்ற சிறிய ரக பயணிகள் விமானம் ஒன்று யோககர்த்தாவிலிருந்து தெற்கு சுலவேசியில் உள்ள மக்காசர் நகருக்கு பறந்து கொண்டிருந்தது.

பறந்து சென்ற 12 மைல்களுக்குப் பிறகு மர்மமான முறையில் விமானம் மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு, ரேடார் அமைப்புகளிலிருந்து மறைந்துவிட்டது.

விமானம் கடைசியாக அறியப்பட்ட இடத்திற்கு அருகில், மரோஸ் ரீஜென்சியின் மலைப்பகுதிக்கு மீட்பு குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஹெலிகாப்டர் மற்றும் ட்ரோன்கள் மூலம் விமானம் தேடப்பட்டு வந்த நிலையில், விமானத்தின் பாகங்கள் மலையின் ஒருபகுதியில் கண்டறியப்பட்டுள்ளன.

இந்தோனேசிய அதிகாரிகள் மற்றும் விமான நிறுவனத்தால் நடத்தப்படும் விசாரணையை ஆதரிக்க ATR நிபுணர்கள் முழுமையாக ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த விமானம், மலையில் மோதி எரிந்திருக்கலாம் என கருதப்படுகிறது.