BREAKING NEWS

காரும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி முச்சக்கரவண்டி சாரதி உயிரிழப்பு

PR
priya priya punidha in Latest Updates
Report
காரும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி முச்சக்கரவண்டி சாரதி உயிரிழப்பு

அனுராதபுரம், தம்புத்தேகமை பிரதேசத்தில் காரும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி இடம்பெற கோர விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளார்.

அத்துடன் முச்சக்கரவண்டியில் பயணித்த பெண்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

முச்சக்கரவண்டி சாரதியான தம்புத்தேகமை பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

முச்சக்கரவண்டியில் பயணித்த அதே பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்கள் காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதியான 71 வயது வயோதிபரைக் கைது செய்துள்ள பொலிஸார்,

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.