BREAKING NEWS

“ஈரானிய கப்பல் விபத்து: 32 பேருக்கு சிகிச்சை”

PR
priya priya punidha in Latest Updates
Report
“ஈரானிய கப்பல் விபத்து: 32 பேருக்கு சிகிச்சை”

கடற்படையினரின் மீட்பு நடவடிக்கையின் மூலம் காப்பாற்றப்பட்ட ஈரானிய கப்பலில் இருந்தவர்களுக்கு தற்போது கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

கரைக்கு அழைத்து வரப்பட்ட 32 ஈரானிய கடற்படை வீரர்கள் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான புதிய காணொளித் தொகுப்பொன்று ‘அத தெரண’வுக்கு கிடைத்துள்ளது.

இன்று அதிகாலை காலி துறைமுகத்திலிருந்து 40 கடல் மைல் தொலைவில் ஈரானிய கப்பல் ஒன்று விபத்துக்குள்ளான நிலையில், அதிலிருந்தவர்களை இலங்கை கடற்படையினர் பத்திரமாக மீட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.