அச்சுவேலி, நிலாவரை பகுதியில் சட்டவிரோதமான முறையில் போதை மாத்திரைகளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை அச்சுவேலி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அச்சுவேலி பொலிஸ் நிலையத்தின் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே இந்தச் சந்தேக நபர் சிக்கியுள்ளார்.
வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து மீட்கப்பட்ட போதை மாத்திரைகள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்குப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.