BREAKING NEWS

“ஆப்கானிஸ்தானில் நில அதிர்வு!”

DH
dhusanthi dhusi in உலகம்
Report
“ஆப்கானிஸ்தானில் நில அதிர்வு!”

ஆப்கானிஸ்தானில் இன்று (12) அதிகாலை வேளையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை 5.29 க்கு இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவுகோலில் 4.6 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.

பூமியின் உட்புறத்தில் சுமார் 150 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர்ச் சேதங்கள் அல்லது கட்டிடப் பாதிப்புகள் குறித்த உத்தியோகபூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த நில அதிர்வினால் மக்கள் மத்தியில் சிறு பதற்றம் நிலவியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.