BREAKING NEWS

உயர்தர பரீட்சை வினாத்தாள் கசிவு தெடர்பில் விசாரணை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைப்பு

MI
mithu mithu in உள்ளூர் செய்திகள்
Report
உயர்தர பரீட்சை வினாத்தாள் கசிவு தெடர்பில் விசாரணை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைப்பு
தற்போது நடைபெற்று வரும் க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் கசிந்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இன்று (நவம்பர் 25) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளைத் தெரிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.

கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்படுவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை நுகேகொடையில் உள்ள தனியார் கல்வி நிலையமொன்றில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மாதிரி வினாத்தாளில் உள்ள 27 கேள்விகளும் உயர்தர பொருளியல் வினாத்தாளில் உள்ள 27 கேள்விகளும் ஒரே மாதிரியாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.