BREAKING NEWS

‘எதிர்காலத் தலைவர்கள்’ உருவாக்கப்பயிற்சி: ரமழான் கால விசேட நெறிமுறை நிறைவு!

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
‘எதிர்காலத் தலைவர்கள்’ உருவாக்கப்பயிற்சி: ரமழான் கால விசேட நெறிமுறை நிறைவு!

இளைஞர்களை மார்க்க, ஒழுக்க மற்றும் தலைமைத்துவ ஆளுமையுள்ளவர்களாக உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட “Future Leaders Islamic Life Studies” எனும் 7 நாள் பயிற்சி நெறியின் நிறைவு விழா, அம்பாறை மாவட்டம் வரிப்பத்தான்சேனை அல்-அமீன் மகா வித்தியாலயத்தில் நேற்று (மார்ச் 13) மிகச் சிறப்பாக நடைபெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) கட்சியின் சமூக, கலாச்சார மற்றும் கல்விப் பிரிவின் ஏற்பாட்டில், புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு இந்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர் ஆதம்பாவா றப்ஸாத் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார். அவருடன் அக்கறைப்பற்று மாநகர சபை உறுப்பினர்களான எஸ்.எம். சபீஸ், சபூர் ஆதம் மற்றும் இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர் எச்.எம். சஜா உள்ளிட்ட அரசியல் முக்கியஸ்தர்களும், உலமாக்களும் கலந்துகொண்டனர்.

பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு இதன்போது சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன. கல்வி மற்றும் மார்க்க விழுமியங்களுடன் கூடிய ஒரு தலைமைத்துவச் சமூகத்தை உருவாக்குவதே இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம் என இங்கு வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அல்-அமீன் மகா வித்தியாலய அதிபர் எஸ்.எல். கலந்தர்லெப்பை உள்ளிட்ட பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.