தமிழக அரசியலில் நடிகர் விஜய் ஏற்படுத்தியுள்ள தாக்கம் பாராட்டுக்குரியது எனவும், அடுத்த தலைமுறையினர் அரசியலை உற்றுநோக்க முக்கிய காரணம் எனவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்துள்ள அண்ணாமலை, “தமிழக அரசியலில் விஜய் ஏற்படுத்திய தாக்கத்தை நாம் கண்டிப்பாகப் பாராட்ட வேண்டும். இன்றைய இளைஞர்கள் மற்றும் அடுத்த தலைமுறையினர் அரசியல் பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவதற்கு விஜய்யே மிக முக்கிய காரணமாகத் திகழ்கிறார்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
விஜய்க்குப் பின்னால் பெரும் இளைஞர் பட்டாளமே அணிதிரண்டு நிற்பதைச் சுட்டிக்காட்டிய அண்ணாமலை, அந்தப் பலத்தை விஜய் மிகவும் முறையாகவும், பொறுப்புடனும் கையாள வேண்டும் எனத் தனது ஆலோசனையையும் முன்வைத்துள்ளார்.
தமிழக அரசியலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) ஏற்படுத்தி வரும் அதிர்வலைகளுக்கு மத்தியில், அண்ணாமலையின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.