BREAKING NEWS

அர்ஜுன ரணதுங்க உள்ளிட்டோருக்கு எதிராக ஊழல் வழக்கு: பிணையில் விடுவிப்பு

PR
priya priya punidha in Latest Updates
Report
அர்ஜுன ரணதுங்க உள்ளிட்டோருக்கு எதிராக ஊழல் வழக்கு: பிணையில் விடுவிப்பு

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிகா ரணதுங்க ஆகியோருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இன்று (23) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பிரதிவாதிகள் இருவரையும் தலா 5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு பிணைப்பத்திரங்களில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், இவ்வழக்கை மே 15ஆம் திகதி விசாரணைக்கு முந்தைய கலந்தாய்விற்காக அழைக்குமாறும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பிரதிவாதிகள், 2017–2018 காலப்பகுதியில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சுமார் 80 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

அத்துடன், ஆறு மாத காலத்திற்கு நாட்டிற்கு எரிபொருள் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டிருந்த மூன்று நீண்டகால ஒப்பந்தங்களை ரத்து செய்து, அதற்குப் பதிலாக 27 உள்ளூர் ஒப்பந்தங்களை அதிக விலையில் செயல்படுத்தியதாகவும் குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.