BREAKING NEWS

“லண்டனில் ஈரானுக்கு உளவுத் தகவல் வழங்கிய சந்தேக நபர்கள் 4 பேர் பிரிட்டிஷ் போலீசால் கைது”

PR
priya priya punidha in Latest Updates
Report
“லண்டனில் ஈரானுக்கு உளவுத் தகவல் வழங்கிய சந்தேக நபர்கள் 4 பேர் பிரிட்டிஷ் போலீசால் கைது”

லண்டனில் உள்ள யூத சமூகத்துடன் தொடர்புடைய இடங்கள் மற்றும் தனிநபர்களை உளவு பார்ப்பதன் மூலம் ஈரானின் உளவுத்துறைக்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் நான்கு நபர்கள் பிரிட்டிஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை (06) அதிகாலை 1 மணிக்குப் பின்னர் பார்னெட், வாட்ஃபோர்ட் மற்றும் ஹாரோவில் உள்ள முகவரிகளில் ஒரு ஈரானிய நாட்டவரும் மூன்று இரட்டை குடியுரிமைக் கொண்ட பிரிட்டிஷ்/ஈரானிய நாட்டவர்களும் கைது செய்யப்பட்டதாக லண்டனின் பயங்கரவாத எதிர்ப்பு காவல் துறையின் துப்பறியும் நபர்கள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 52, 40, 55 மற்றும் 22 வயதுடையவர்கள் என்றும், அவர்களின் சொந்த முகவரிகளில் குறித்து விசாரணைகள் நடந்து வருவதாகவும் லண்டன் பெருநகர காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம், குற்றவாளிகளுக்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் மேலும் ஆறு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்சமயம் கைது செய்யப்பட்ட 10 நபர்களும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பிரிட்டிஷ் சட்டமன்ற உறுப்பினர்களும் உள்நாட்டு உளவு நிறுவனங்களும் ஈரானிடமிருந்து ஐக்கிய இராஜ்ஜியத்துக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பல ஆண்டுகளாக எச்சரித்து வரும் நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.