அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் நேற்று (01) நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது உரிமை கோரப்படாத ஐந்து கையடக்கத் தொலைபேசிகளும் தடைசெய்யப்பட்ட சில பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தொலைபேசிகளுடன் 17 சிம் அட்டைகள், ஐஸ் உள்ளடங்கிய 8 சிறிய பொட்டலங்கள் மற்றும் ஹெரோயின் உள்ளடங்கிய 05 சிறிய பொட்டலங்கள் ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் சிறைச்சாலை அறைக்குள், 04 போதை மாத்திரைகள், 02 புகையிலை சுருட்டுகள், பல கூர்மையான ஆயுதங்கள் ஆகியனவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் மேலதிக விசாரணைக்காக சிறைச்சாலை தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
மேலும் போதைப் பொருட்கள் சிறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதுடன் தடை செய்யப்பட்ட பொருட்கள் அழிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.