BREAKING NEWS

புகழ்பெற்ற பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

DH
dhusanthi dhusi in சினிமா
Report
புகழ்பெற்ற பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

இந்திய திரையிசை வரலாற்றின் மகத்தான குரல்களில் ஒன்றான ஆஷா போஸ்லே (92), உடல்நலக்குறைவு காரணமாக இன்று இயற்கை எய்தினார்.

சுவாசக் கோளாறு மற்றும் இதய பாதிப்பு காரணமாக மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்ததாக ஆஷா போஸ்லேயின் மகன் ஆனந்த் உறுதிப்படுத்தியுள்ளார். ஆஷா போஸ்லேயின் இறுதிச் சடங்கு நாளை நடைபெறவுள்ளது.

இளையராஜா முதல் ஏ.ஆர். ரஹ்மான் வரை பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் அவர் பாடிய சில முக்கிய பாடல்கள்:

•செண்பகமே செண்பகமே – எங்க ஊரு பாட்டுக்காரன் (இளையராஜா இசை)

•நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி – ஹே ராம்

•செப்டம்பர் மாதம் – அலைபாயுதே (ஏ.ஆர். ரஹ்மான் இசை)

•வெண்ணிலா வெண்ணிலா – இருவர்

•ஓ பட்டர்ஃபிளை – மீரா (விக்ரம் நடித்த திரைப்படம்)

•எங்கெங்கே நெருக்கி நெருக்கி – நேருக்கு நேர்

•சாத்து நட சாத்து – சேதுபதி ஐபிஎஸ்

•அதிகாலை நேரம் – நான் சொன்னதே சட்டம்

தமிழ், இந்தி எனப் பல்வேறு இந்திய மொழிகளில் 10,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனை அளவுக்கு உயர்ந்தவர் ஆஷா போஸ்லே. சுமார் 80 ஆண்டுகால இசைப் பயணத்தை நிறைவு செய்துள்ள ஆஷா, இந்திய இசையின் அடையாளமாகத் திகழ்கிறார்.

தன்னுடைய தனித்துவமான குரலால் ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக இந்திய இசையை வழிநடத்தியவர். மெல்லிசை முதல் துள்ளல் இசை வரை அனைத்து பாணிகளிலும் முத்திரை பதித்த ஆஷா போஸ்லேவின் மறைவு, ஒட்டுமொத்த இசை இரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது