BREAKING NEWS

உலகப் பொருளாதாரத்தை உலுக்கும் ஈரான் போர்!

DH
dhusanthi dhusi in உலகம்
Report
உலகப் பொருளாதாரத்தை உலுக்கும் ஈரான் போர்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் 4-வது வாரத்தை எட்டியுள்ள நிலையில், இரு நாடுகளும் மாறி மாறி விடுத்து வரும் கடும் எச்சரிக்கைகளால் ஆசியாவின் முக்கிய பங்குச்சந்தைகள் இன்று (23) பெரும் சரிவைச் சந்தித்துள்ளன.

ஜப்பானின் Nikkei 225 குறியீடு காலை வர்த்தகத்தில் 3.4% வீழ்ச்சியடைந்தது.

தென் கொரியாவின் Kospi குறியீடு சுமார் 5% வரை சரிவைக் கண்டுள்ளது.

உலகளாவிய எரிபொருள் போக்குவரத்துக்கு முக்கியமாக விளங்கும் ‘ஹோர்முஸ் நீரிணையை’ (Strait of Hormuz) ஈரான் திறக்காவிட்டால், அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்களை முற்றிலும் அழித்துவிடப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவின் இத்தகைய தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், பிராந்தியத்திலுள்ள முக்கிய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் எரிசக்தி நிலையங்களைக் குறிவைப்போம் என ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.

எரிபொருள் இறக்குமதிக்காக ஹோர்முஸ் நீரிணையையே பெரிதும் நம்பியிருக்கும் ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள், இந்தப் போரினால் மிக மோசமான பொருளாதாரப் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன.