அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் கீழ் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் விண்ணப்பித்த பயனாளிகளின் தகவல்களைப் புதுப்பிக்கும் பணிகள் தற்போது நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நலன்புரி நன்மைகள் சபையின் அறிவுறுத்தலின்படி, தகுதியுடைய 29 இலட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பதாரர்களின் தகவல்களை உறுதிப்படுத்தும் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுவோரின் பட்டியலை ஆண்டுதோறும் புதுப்பிப்பது கட்டாயம் என்பதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கணக்கெடுப்புப் பணிகள் வரும் மார்ச் 28 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளன. எனவே, கணக்கெடுப்பு உத்தியோகத்தர்கள் உங்கள் வீட்டிற்கு வரும்போது பின்வரும் ஆவணங்களைத் தயாராக வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்:
18 வயதுக்கு மேற்பட்ட உறுப்பினர்களின் தேசிய அடையாள அட்டைகள்.
கடந்த 3 மாதங்களுக்கான மின்சாரப் பட்டியல்கள் (Electricity Bills).
காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் வாகன உரிமைப்பத்திரங்கள்.
தேவையேற்பின் மருத்துவச் சான்றிதழ்கள்.
முறையான ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் உங்களது நலன்புரி கொடுப்பனவுகளைத் தடையின்றிப் பெற்றுக்கொள்ள முடியும் என அந்தச் சபை தெரிவித்துள்ளது.’