சித்திரை புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, அஸ்வெசும (Aswesuma) நலன்புரித் திட்டத்தின் கீழ் பயன்பெறும் குடும்பங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க விசேட நிதிச் சலுகையை அறிவித்துள்ளார்.
இதுவரை ரூ. 17,500 பெற்று வந்த பயனாளர்களுக்கு இந்த மாதம் ரூ. 25,000 வழங்கப்படவுள்ளது.
ரூ. 10,000 உதவித்தொகை பெற்று வந்தவர்களுக்கு இந்த மாதம் ரூ. 15,000 வழங்கப்படவுள்ளது.
புத்தாண்டு கால செலவுகளைச் சமாளிக்கும் வகையில், வறிய மற்றும் நடுத்தரக் குடும்பங்களுக்குத் தற்காலிக பொருளாதார நிவாரணத்தை வழங்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த மேலதிக நிதி வரும் நாட்களில் பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வைப்பிலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.