45 ஆண்டுகளைக் கடந்து 46ஆவது ஆண்டில் கால்பதிக்கும் புதிய அலை கலை வட்டம் 1995ஆம் ஆண்டினில் ஆரம்பித்த விருது வழங்கும் விழாவை இம்முறை 20ஆவது ஆண்டின் நிகழ்வாக நடத்துகின்றது.

கலை,இலக்கியத் துறைகளில் இளையவர்களின் ஆர்வங்களை மேம்படுத்தவும் அவர்களது திறமை வெளிபாட்டுக்கு போட்டிகளை நடத்தி ஊக்குவிக்கவும் இந்த நிகழ்வு முக்கியத்துவம் வழங்குகின்றது.
அந்த வகையில் இம்முறை சிறுகதை, கட்டுரை,கவிதை,சித்திரம்,மருதாணி அலங்காரம்,பாடல், மற்றும் நடனப்போட்டிகளை நடத்தி 25 வெற்றியாளர்களுக்கு பரிசில்கள் வழங்கப் படவுள்ளன.

அத்துடன் சினிமா, நாடகம்,இசை,இலத்திரனியல்ஊடகத்துறை, அச்சு ஊடகத்துறை, நடனம்,படைப்பாக்கம்,அழகுகலை,சமூக சேவை மற்றும் சமூகசேவை அமைப்பு போன்ற பத்து துறைகளை சேர்ந்த முக்கியஸ்தர்களுக்கு கலாமித்ரா விருது வழங்கி கெளரவிக்கப்படவுள்ளது.

இம்முறை விசேட ஏற்பாடாக மலையகத்தை சேர்ந்த சமூக சேவையாளர்கள் கலைஞர் பத்து பேருக்கும் சமகாலத்தில் தொடர்ச்சியாக கலை மற்றும் சமூகப்பணியாற்றி வரும் மேலும் ஜவருக்கு என15 பேருக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்படவுள்ளன.

மொத்தமாக 50 பேருக்கு விருது வழங்கும் இவ்விழா வரும் 30ஆம் திகதி மாலை 5.30.மணிக்கு கொழும்பு-11,செட்டியார் தெருவில் அமைந்துள்ள கல்யாண முருகன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

மேற்படி அமைப்பின் நிறுவனர் கலைஞர்-ஊடகவியலாளர் ராமேத்தா தலைமையில் நடைபெறும் இந் நிகழ்வினின் பிரதம அதிதியாக ஹாசிம் உமர் பவுண்டேஷன் நிறுவனர் ஹாசிம் உமரும் கெளரவ விருந்தினர்களாக தமிழகத்தைச் சேர்ந்த
பிரபல தொழில் அதிபர் டாக்டர் பி ஆறுமுகபாண்டியன் மற்றும் தமிழக சூரியா வைத்தியசாலையின் பிராந்திய இயக்குநர் பி கே. சரவணனும் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர்.

இலங்கை சினிமா