BREAKING NEWS

பம்பலப்பிட்டி ரயில் நிலையம் 600 இலட்சத்தில் நவீனமயம்!

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
பம்பலப்பிட்டி ரயில் நிலையம் 600 இலட்சத்தில் நவீனமயம்!

கிளீன் ஸ்ரீலங்கா (Clean Sri Lanka) திட்டத்தின் கீழ், பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தை நவீனமயமாக்கும் பணிகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நேற்று (19) ஆரம்பித்து வைக்கப்பட்டன.

தாவூதி போரா (Dawoodi Bohras) சமூகத்தின் நிதி உதவியுடன் 600 இலட்சம் ரூபா செலவில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

புதிய கூரைகள், மின்விளக்குகள், பாதுகாப்புக் கேமராக்கள் (CCTV), நவீன கழிவறைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான விசேட அணுகுமுறைப் பாதைகள் அமைக்கப்படவுள்ளன.

அடுத்த 5 மாதங்களுக்குள் அனைத்துப் பணிகளையும் நிறைவு செய்து மக்களிடம் ஒப்படைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர், ரமழான் மாத இறுதியில் போரா சமூகம் வழங்கியுள்ள இந்தப் பங்களிப்பு, நாட்டின் தேசிய ஒற்றுமைக்குச் சிறந்த முன்மாதிரி எனப் பாராட்டினார்.