BREAKING NEWS

வாழை விவசாயிகளுக்குப் பேரிடி! எரிபொருள் தட்டுப்பாட்டால் விற்பனை முடக்கம்.

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
வாழை விவசாயிகளுக்குப் பேரிடி! எரிபொருள் தட்டுப்பாட்டால் விற்பனை முடக்கம்.

சித்திரைப் புத்தாண்டு நெருங்கி வரும் நிலையில், நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக உள்நாட்டு வாழை விவசாயிகள் பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது குறித்து நாடாளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர் பி. ஆரியவன்ச, “வழக்கமாக லொறிகளில் வந்து வாழைகளை மொத்தமாக கொள்வனவு செய்யும் வியாபாரிகள், தற்போது எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக விவசாயிகளைத் தேடி வருவதில்லை.

புத்தாண்டு போன்ற முக்கியமான விற்பனை காலத்தில் இந்தச் சிக்கல் எழுந்துள்ளதால், விவசாயிகளுக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்,” என வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலளித்த பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, விவசாயிகளின் இந்தப் பிரச்சினைக்கு மிக விரைவில் தீர்வு வழங்கப்படும் என உறுதியளித்தார். “வாழை விவசாயிகள் தற்போது நிலவும் சூழலைப் புரிந்து கொண்டு சற்றுப் பொறுமையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய அரசு தயார் நிலையில் உள்ளது,” என அவர் தெரிவித்தார்