இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் லசித் மலிங்க நடத்திய, நாடு முழுவதும் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களைத் தேர்வு செய்யும் பயிற்சி முகாமில் இன்று கலந்து கொண்ட அனைவரையும் விட அதிக வேகமாக, மணிக்கு 128 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசிய மட்டக்களப்பைச் சேர்ந்த மாணவன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இன்னொரு பக்கம், ஜாம்பவான் லசித் மலிங்கவின் அர்ப்பணிப்பு அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. உலகின் எந்த நாட்டிலும் சொகுசாக வாழும் வசதி இருந்தும், ஒரு பிளாஸ்டிக் கதிரையில் அமர்ந்து வெயிலைப் பொருட்படுத்தாமல் இந்த இளைஞர்களைச் செதுக்கி வருகிறார் மலிங்க.
இலங்கை கிரிக்கெட் சபை செய்ய வேண்டிய வேலையைத் தனது சொந்த முயற்சியால் மலிங்க முன்னெடுத்துள்ளார். நாடு முழுவதுமுள்ள திறமையான இளைஞர்களைக் கொழும்புக்கு வரவழைத்து, அவர்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் சீருடைகளை வழங்கி, உலகத்தரம் வாய்ந்த வீரர்களாக மாற்றும் பணியில் அவர் தீவிரமாகியுள்ளார்.
“முடியாது என்று முடங்கிவிடாமல், நம்மால் முடிந்ததைச் செய்வோம்” என்ற மலிங்கவின் இந்த வைராக்கியம், வெகு விரைவில் இலங்கையை உலகின் பலமிக்க வேகப்பந்து வீச்சுப் படையைக் கொண்ட நாடாக மாற்றப்போவது உறுதி!