வவுணதீவில் இளம் தாயைக் கடத்தி, நகைகளைக் கொள்ளையிட்டு கிணற்றுக்குள் வீசிய கொடூரச் சம்பவம் தொடர்பாக, ஒரு தம்பதியினர் உட்பட மூவரைப் பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை குழந்தையுடன் சென்ற இளம் தாயை, முச்சக்கரவண்டியில் ஏற்றி மயக்க மருந்து கலந்த பழச்சாறு கொடுத்துக் கடத்தியுள்ளனர்.
மயக்கமடைந்த அவரிடமிருந்து 5 பவுண் தாலிக்கொடி மற்றும் தங்கச் சங்கிலியைக் கொள்ளையிட்டுள்ளனர்.
குழந்தையை வயலில் வீசிவிட்டு, தாயைப் பாழடைந்த கிணற்றுக்குள் தூக்கி வீசிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
உயிருக்குப் போராடிய நிலையில் தாய் மீட்கப்பட்டதுடன், அதே கிணற்றிலிருந்து மற்றுமொரு பெண்ணின் சடலமும் மீட்கப்பட்டது.
சிசிடிவி (CCTV) காட்சிகளின் அடிப்படையில் தேடுதல் நடத்திய பொலிஸார், வந்தாறுமூலை மற்றும் வவுணதீவு பகுதிகளில் வைத்து 26, 34 மற்றும் 22 வயதுடைய மூன்று சந்தேகநபர்களைக் கைது செய்தனர். இதே பாணியில் மற்றொரு பெண்ணையும் கொலை செய்ததாகக் கைதானவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.