BREAKING NEWS

200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்.

DH
dhusanthi dhusi in விளையாட்டு
Report
200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், ஆர்சிபி அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், ஐபிஎல் வரலாற்றில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.

சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மத்ரேவின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், 192 போட்டிகளில் அவர் இந்த 200 விக்கெட் இலக்கை எட்டியுள்ளார்.

யுஸ்வேந்திர சாஹலுக்குப் பிறகு ஐபிஎல்-இல் 200 விக்கெட்டுகளை எட்டிய இரண்டாவது பந்துவீச்சாளராகவும், வேகப்பந்து வீச்சாளர்களில் முதலிடத்திலும் இடம்பிடித்துள்ளார்.

ஜஸ்பிரித் பும்ரா மற்றும் லசித் மலிங்கா போன்ற ஜாம்பவான்களால் கூட இதுவரை எட்ட முடியாத இந்தச் சாதனையை புவனேஷ்வர் குமார் நிகழ்த்திக் காட்டியுள்ளது இரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.