கிழக்கு தெஹ்ரானில் பாரிய வெடிப்புச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனை ஈரான் அரச ஊடகங்களும், AFP செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் ஒருவரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதனிடையே, “தெஹ்ரானில் உள்ள ஈரான் பயங்கரவாத அரசாங்கத்தின் இலக்குகளைக் குறிவைத்து பாரிய அளவிலான தாக்குதல்களை” ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் இன்று (04) காலை விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளன.