BREAKING NEWS

நாளை முதல் பேருந்து கட்டணங்கள் உயர்வு.

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
நாளை முதல் பேருந்து கட்டணங்கள் உயர்வு.

இன்று (23) ஒரு சில தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபட்ட போதிலும், பல பகுதிகளில் பயணிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் (NTC) பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிரண்டா தெரிவித்துள்ளார்.

அதிவேக வீதி பேருந்து சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் சாதாரண வீதிகள் ஊடாகப் பயணிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) அனைத்துப் பேருந்துகளும் இன்று சேவையில் உள்ள போதிலும், தனியார் பேருந்துகளின் பற்றாக்குறை காரணமாகப் போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமங்கள் தொடர்கின்றன.

குறைந்தபட்சக் கட்டணம் முதல் அதிகபட்சக் கட்டணம் வரை 350 கட்டணப் பிரிவுகளைக் உள்ளடக்கிய புதிய திருத்தப்பட்ட பேருந்து கட்டணப் பட்டியலை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தயாரித்துள்ளது. இது இன்று மாலை அமைச்சரவையின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

பேருந்து கட்டணங்களை 10 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரிப்பதற்கான அனுமதியை ஆணைக்குழு கோரியுள்ளது. அமைச்சரவையின் அனுமதி கிடைத்தவுடன் புதிய கட்டண விபரங்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என கலாநிதி நிலான் மிரண்டா மேலும் குறிப்பிட்டார்.