BREAKING NEWS

இலங்கை மின்சார சபைக்குப் பதில் 6 புதிய நிறுவனங்கள் – நியமனங்கள் ஆரம்பம்!

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
இலங்கை மின்சார சபைக்குப் பதில் 6 புதிய நிறுவனங்கள் – நியமனங்கள் ஆரம்பம்!

இலங்கை மின்சார சபையின் (CEB) மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக, அதற்குப் பதிலாக நிறுவப்பட்டுள்ள ஆறு புதிய நிறுவனங்களில் மூன்று நிறுவனங்களுக்கான பொது முகாமையாளர்கள் (General Managers) இன்று (08.03.2026) நியமிக்கப்பட்டுள்ளனர்.

Electricity Distribution Lanka Pvt Ltd: இதன் பொது முகாமையாளராக பொறியியலாளர் K.S.I. குமார நியமிக்கப்பட்டுள்ளார்.

Electricity Generation Lanka Pvt Ltd: இதன் பொது முகாமையாளராக பொறியியலாளர் சாலிய பண்டிதரத்ன பொறுப்பேற்றுள்ளார்.

National Transmission System Services Pvt Ltd: இதன் பொது முகாமையாளராக பொறியியலாளர் N.S. வெத்தசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை மின்சார சபையை சுயாதீனமான மற்றும் வினைத்திறன் மிக்க நிறுவனங்களாக மாற்றும் அரசின் திட்டத்தின் கீழ் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. எஞ்சிய மூன்று நிறுவனங்களுக்கான நியமனங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.