சிறுவர்களிடையே ஏற்படும் மூளைப் புற்றுநோய்களை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிவதன் மூலம் 90% முதல் 95% வரையான பாதிப்புகளைக் குறைக்க முடியும் என கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் டி.பி.சி.கே. ஆனந்தலால் தெரிவித்துள்ளார்.சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் சுட்டிக்காட்டிய 6 முக்கிய அறிகுறிகள் இதோ:இரண்டு வாரங்களுக்கு மேலாகத் தொடர்ந்து தலைவலி இருந்தால், அது சாதாரணமானதாக இருக்க வாய்ப்பில்லை. உடனடியாக ஸ்கேன் (Scan) பரிசோதனை செய்வது அவசியம்.தலைவலியுடன் அல்லது தலைவலி இல்லாமலும் வாந்தி ஏற்படலாம். குறிப்பாக, காலையில் தேநீர் அருந்திய பின் பிள்ளை வாந்தி எடுத்தால் பெற்றோர் கூடுதல் அவதானம் செலுத்த வேண்டும்.பிள்ளைகளுக்கு ஏற்படும் வலிப்பை ஒருபோதும் சாதாரணமாகக் கருதக்கூடாது. இது நரம்பு மண்டலப் பாதிப்பு அல்லது புற்றுநோய் கட்டியின் அறிகுறியாக இருக்கலாம்.பிள்ளை நடக்கும் விதம் திடீரென மாறினால், அது விளையாடும் போது ஏற்பட்ட காயம் எனத் தவறாக நினைக்க வேண்டாம். இது மூளைக்கட்டியின் அறிகுறியாக இருக்க வாய்ப்புண்டு.கைகால்களில் பலவீனம், பார்வைக் குறைபாடு, காது கேளாமை அல்லது உணவை விழுங்குவதில் சிரமம் போன்ற மாற்றங்கள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.3 வயதுக்குட்பட்ட பிள்ளைகளால் வலியைச் சொல்ல முடியாது. எனவே, வளர்ச்சி அட்டவணையின்படி தலையின் சுற்றளவை அளவிடுவது அவசியம். வயதுக்கு மீறிய வகையில் தலை பெருத்துக் காணப்பட்டால் அது ஆபத்தான அறிகுறியாகும்.
23 Feb 2026 | 11:58 AM
11 views
சிறுவர் மூளைப் புற்றுநோய்: 95% வரை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும் 6 முக்கிய அறிகுறிகள்!
DH
dhusanthi dhusi
in உள்ளூர் செய்திகள்
#BrainTumorAwareness#ChildhoodCancer#HealthAlert#LadyRidgewayHospital#LKA#ParentingTips#PediatricHealth#srilankanews
தொடர்புடைய செய்திகள்
Latest Updates
யாலா பருவத்திற்கு நீர் போதுமானது; விநியோகத்தில் சிக்கல் இல்லை என நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவிப்பு
03 Apr 2026 · 10:44 AM
Latest Updates
நாளை முதல் அரச மருத்துவர்கள் வேலைநிறுத்தம்; தொடர்வது குறித்து GMOA முடிவு
03 Apr 2026 · 10:33 AM