BREAKING NEWS

“துபாயில் பிடிபட்ட பாதாள உலகக் கும்பல் தலைவர்கள்.”

PR
priya priya punidha in Breaking
Report
“துபாயில் பிடிபட்ட பாதாள உலகக் கும்பல் தலைவர்கள்.”

நீதியின் பிடியிலிருந்து தப்பி வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த குற்றவாளிகளுக்குச் சவுக்கடி கொடுக்கும் வகையில், துபாயில் பதுங்கியிருந்த முக்கிய பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த இருவரும், அரச நிதியைச் சூறையாடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்ணும் இன்று அதிகாலை இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டனர்.

பொலிஸாரின் கடும் முயற்சியால் துபாய் பாதுகாப்புப் பிரிவினரின் உதவியுடன் இவர்கள் கைது செய்யப்பட்டு, இன்று (16) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இலங்கை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். “எங்கு தப்பினாலும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது” என்பதை இந்த அதிரடி நடவடிக்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.