BREAKING NEWS

உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி: 4 நாட்களாக மூடப்பட்டிருந்த பிரியாணி கடையில் இளைஞரின் சடலம் மீட்பு!

DH
dhusanthi dhusi in சமீபத்திய செய்திகள்
Report
உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி: 4 நாட்களாக மூடப்பட்டிருந்த பிரியாணி கடையில் இளைஞரின் சடலம் மீட்பு!

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பக்ஷி கா தலாப் (Bakshi Ka Talab) பகுதியில், மூடப்பட்டிருந்த பிரியாணி கடை ஒன்றினுள் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.

மூடப்பட்டிருந்த குறித்த பிரியாணி கடைக்குள் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, காவல்துறையினருக்குத் தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

உயிரிழந்தவர் 35 வயது மதிக்கத்தக்க விஜய் பால் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடையின் உரிமையாளரின் தந்தை உயிரிழந்த காரணத்தினால், கடை கடந்த நான்கு நாட்களாகத் தொடர்ந்து மூடப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த விஜய் பால் குறித்து அவரது குடும்பத்தினர் தெரிவிக்கையில், அவர் தினக்கூலியாக வேலை செய்து வந்தவர் என்றும், கடந்த 5 ஆண்டுகளாகத் தனது மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்தவர் என்றும், மதுப் பழக்கத்திற்கு அடிமையாகியிருந்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே, அவர் உயிரிழந்ததற்கான உண்மையான காரணம் தெரியவரும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.