BREAKING NEWS

நாடு தழுவிய பொலிஸ் அதிரடி: ஒரே நாளில் 630 பேர் கைது!

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
நாடு தழுவிய பொலிஸ் அதிரடி: ஒரே நாளில் 630 பேர் கைது!

பொலிஸ் மா அதிபரின் விசேட அறிவுறுத்தலுக்கு அமைய, நாடளாவிய ரீதியில் நேற்று திங்கட்கிழமை (02) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் முடிவுகளைப் பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.

இந்த விசேட நடவடிக்கையின் போது, சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டோர் மற்றும் பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டோர் என மொத்தம் 630 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

31,076 பேர் பொலிஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என நேரடியாக அடையாளம் காணப்பட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கு அமைய: 248 பேர்.

திறந்த பிடியாணைகளுக்கு அமைய: 157 பேர்.

வாகன விபத்துக்களைத் தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது,

மதுபோதையில் வாகனம் செலுத்தியோர்: 159 பேர்.

கவனக்குறைவாக வாகனம் செலுத்தியோர்: 39 பேர்.

பிற போக்குவரத்து குற்றங்கள்: 3,677 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டத்தை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக இவ்வாறான விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.