BREAKING NEWS

டயானா கமகேவுக்கு எதிரான வழக்கு: மேலதிக சாட்சி விசாரணை பெப்ரவரி 16 இற்கு ஒத்திவைப்பு

PR
priya priya punidha in Latest Updates
Report
டயானா கமகேவுக்கு எதிரான வழக்கு: மேலதிக சாட்சி விசாரணை பெப்ரவரி 16 இற்கு ஒத்திவைப்பு

கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு பொய்யான தகவல்களை வழங்கியமை மற்றும் செல்லுபடியாகும் விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (26) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு தொடர்பான மேலதிக சாட்சி விசாரணைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி முன்னெடுக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

2016 ஜூலை 14 முதல் 2020 நவம்பர் 01 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் செல்லுபடியாகும் விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை மற்றும் பொய்யான தகவல்களை வழங்கி கடவுச்சீட்டு பெற்றமை போன்ற 7 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.