BREAKING NEWS

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ள நபர் ஒருவர்

PR
priya priya punidha in Latest Updates
Report
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ள நபர் ஒருவர்

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு, பொரலந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். 

நேற்று (08) மாலை இந்த சம்பவம் ஹப்புத்தளை பொலிஸ் பிரிவின் பிடபொல பகுதியில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். 

உயிரிழந்தவர் பிடபொல பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். 

இறந்தவருக்குச் சொந்தமான காணியிவ் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இந்த தாக்குதலுக்கான காரணம் மற்றும் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. 

சம்பவம் தொடர்பில் ஹப்புத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.