கொழும்பு துறைமுக நகர கடற்கரைப் பகுதியில், யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
துறைமுக நகர கடற்கரையில் ஆண் ஒருவரின் உடல் மிதப்பதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த கொழும்பு துறைமுக காவல்துறையினர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன்போது குறித்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது.
உயிரிழந்தவர் யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் என காவல்துறையினரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி துறைமுக நகர வளாகத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகவே, இவர் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு வருகை தந்துள்ளார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இளைஞரின் உயிரிழப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது எதிர்பாராத விபத்தா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்து கொழும்பு துறைமுக காவல்துறையினர் மேலதிக தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். உயிரிழந்தவரின் உடலம் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
.