BREAKING NEWS

323 கிலோ ஹெரோயின் பறிமுதல்: 6 மீனவர்கள் கைது

PR
priya priya punidha in Latest Updates
Report
323 கிலோ ஹெரோயின் பறிமுதல்: 6 மீனவர்கள் கைது

பேருவளைக்கு அப்பாலான ஆழ்கடலில் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பு நடவடிக்கையின் போது 300 கிலோகிராமிற்கு மேற்பட்ட ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட 6 மீனவர்களை தடுத்து வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இன்று (02) சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மீனவர்கள் மற்றும் பலநாள் கடல் மீன்பிடி படகு, வெளிநாட்டு உளவுத்துறை தகவலின் அடிப்படையில், ஏப்ரல் 01ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

போதைப்பொருள் தடுப்பு பிரிவு (PNB) மேற்கொண்ட ஆரம்ப விசாரணைகளில், அந்த படகில் 298 பொதிகளாக அடுக்கப்பட்ட 323 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு 6.2 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

மேலும், இந்த போதைப்பொருள் சரக்கு ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒரு கப்பலில் இருந்து குறித்த மீன்பிடி படகுக்கு மாற்றப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.