BREAKING NEWS

தர்மபுரம் பகுதியில் விவசாயி ஒவ்வொரு வருடமும் அறுவடை நெல்களை வறிய குடும்பங்களுக்கு வழங்கி வருகிறார்

PR
priya priya punidha in Latest Updates
Report
தர்மபுரம் பகுதியில் விவசாயி ஒவ்வொரு வருடமும் அறுவடை நெல்களை வறிய குடும்பங்களுக்கு வழங்கி வருகிறார்

கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தர்மபுரம் பகுதியில் வசித்து வரும் விவசாயி ஒருவர் ஒவ்வொரு வருடமும் பெரும்போக அறுவடை முடிவடைந்ததும் தாம் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கையில் அறுவடை செய்த நெல்லினை தமது பகுதியில் நெற்செய்கை மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ள வறிய குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கும் செயற்பாட்டை மேற்கொண்டு வருகின்றார்.

நேற்றுமுன்தினம் (20) தர்மபுரம் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் வைத்து தம்மால் முடிந்த வரையில் அறுவடை செய்த நெல்லின் ஒரு பகுதியில் 30 குடும்பங்களுக்கு ஒரு மூட்டை வீதம் வழங்கினார்.

இதன்போது கூறுகையில்,

தமது பெயரினையோ அல்லது தமது முகத்திலையோ ஊடகங்களுக்கு தெரிவிக்க விரும்பவில்லை எனவும் பிறருக்கு உதவும் மனம் இருந்தால் மட்டும் போதும், என்னால் முடிந்தவரை ஒவ்வொரு வருடமும் இதேபோன்று வழங்கி வருவேன். வழங்குவேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.