BREAKING NEWS

மருத்துவர்களுக்கு சுகாதார அமைச்சர் விடுத்த அதிரடி உத்தரவு.

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
மருத்துவர்களுக்கு சுகாதார அமைச்சர் விடுத்த அதிரடி உத்தரவு.

பயிற்சி முடித்த மருத்துவர்கள் சனிக்கிழமை (04) நண்பகல் 12:00 மணிக்குள் அரச நியமனத்திற்கு விண்ணப்பிக்காவிடின், அவர்கள் நிரந்தரமாக வேலை வாய்ப்பை இழப்பார்கள் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எச்சரித்துள்ளார்.

சனிக்கிழமை நண்பகலுக்குப் பிறகு ஒரு நிமிடம் கூட கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது. விண்ணப்பிக்கத் தவறுவோரின் தற்போதைய பதவிகள் மற்றும் சம்பளம் உடனடியாக நிறுத்தப்படும்.

GMOA முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாவதாகவும் அமைச்சர் சாடியுள்ளார்.

மருத்துவர்களை விண்ணப்பிக்க விடாமல் தடுப்பவர்கள் அல்லது அச்சுறுத்துபவர்கள் மீது பொலிஸார் மற்றும் CID ஊடாகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த வாய்ப்பைத் தவறவிடுபவர்கள், அடுத்ததாக வரும் 1,300 மருத்துவர்களுக்கும் பின்னரே தரவரிசையில் சேர்க்கப்படுவர்.